வருஷாபிஷேக விழா -2017 அழைப்பிதழ்

                                நமது      இரணியல்    கீழத்தெரு    ஸ்ரீசிங்க    ரட்சக    விநாயகர்    கோவிலில்   ஒவ்வொரு     ஆண்டும்  

                 விநாயகர்   பெருமானை  சிலையாக    பிரதிஷ்டை  செய்த   நாளான   தை  மாதம்  ரோகிணி நட்சத்திரம் அன்று

                 வருஷாவருஷ  விழாவாக  மிக  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.    இந்த  வருடம்  பிப்ரவரி 6-ம் நாள்   

                 திங்கள்கிழமை ரோகிணி நட்சத்திரத்தன்று  வருஷாபிஷேக  விழா சிறப்பாக நடைபெற இருக்கின்றது. அன்று 

                 காலை முதல்  சிறப்பு  பூஜைகள்  நடத்தப்படும்.

வருஷாபிஷேக பூஜை
காலை   6:00  மணி : கணபதி ஹோமம்
காலை   7:00  மணி : அபிஷேகம்
காலை   8:15  மணி : தீபாராதனை
காலை 9:30  மணி : கலச பூஜை தொடங்குகிறது.
மதியம் 12:00  மணி : கலசாபிஷேகம்
மதியம்   12:30  மணி : சிறப்பு தீபாராதனை

                                         

                                 வருஷாபிஷேக     விழாவில்     நம்பூதிரிகளை    கொண்டு    கலசாபிஷேகம்    நடத்தப்பட   இருக்கிறது.

                  முன்னதாக   9   கலசங்களை  கொண்டு   கலச  பூஜை  நடத்தப்படும்.  பின்னர் அக்கலசங்களில்  உள்ள  நீரால்

                  ஒவ்வொரு   சன்னதியிலும்   அபிஷேகம்   நடைபெறும்.    பின்னர்   நண்பகல்   12.30   மணியளவில்  உச்சகால

                  தீபாராதனை    நடைபெறும்.     இவ்விழாவில்   நம்   சமுதாய   மக்கள்   அனைவரும்   தங்கள்   குடும்பத்துடன் 

                  தவறாது   கலந்து   கொண்டு  இவ்விழாவினை   சிறப்பித்து    நமது   ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் அருள் பெற்று

                  செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

                  குறிப்பு :           அபிஷேகத்திற்குரிய  பால்,  எண்ணெய்,  பன்னீர்,  தயிர்,  தேன்,  இளநீர்,  போன்ற பொருட்களை

                                    கொடுக்க   விரும்பும்   பக்தர்கள்   காலை   6:45 மணி   முன்பு  கோவிலில்  கொடுக்குமாறு  அன்புடன்  

                                     கேட்டுக்  கொள்ள படுகிறார்கள்.

                                             

Back

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்