வருஷாபிஷேக விழா -2012 அழைப்பிதழ்

                                     நமது       இரணியல்      கீழத்தெரு      ஸ்ரீசிங்க      ரட்சக      விநாயகர்     கோவிலில்   ஒவ்வொரு   ஆண்டும்  

                 விநாயகர்    பெருமானை    சிலையாக    பிரதிஷ்டை   செய்த    நாளான   தை   மாதம்   ரோகிணி   நட்சத்திரம்   அன்று

                 வருஷாவருஷ   விழாவாக   மிக   சிறப்பாக    கொண்டாடப்பட்டு    வருகின்றது.      இந்த     வருடம்    பிப்ரவரி  3,    2012   

                 வெள்ளி     கிழமை  ரோகிணி நட்சத்திரத்தன்று   வருஷாபிஷேக   விழா   நடைபெற இருக்கின்றது.    அன்று  காலை  

                 முதல்  சிறப்பு  பூஜைகள்  நடத்தப்படும்.

 

வருஷாபிஷேக பூஜை
காலை   6:30  மணி : கணபதி ஹோமம்
காலை   7:00  மணி : அபிஷேகம்
காலை   8:15  மணி : தீபாராதனை
காலை 9:30  மணி : கலச பூஜை தொடங்குகிறது.
மதியம் 12:00  மணி : கலசாபிஷேகம்
மதியம்   12:30  மணி : சிறப்பு தீபாராதனை

                                         

                    வருஷாபிஷேக   விழாவில்  நம்பூதிரிகளை  கொண்டு  கலசாபிஷேகம்   நடத்தப்பட இருக்கிறது.

                  முன்னதாக   9   கலசங்களை கொண்டு  கலச  பூஜை  நடத்தப்படும்.  பின்னர் அக்கலசங்களில்  உள்ள  நீரால்

                  ஒவ்வொரு   சன்னதியிலும்  அபிஷேகம்  நடைபெறும்.   பின்னர்   நண்பகல்  12.30  மணியளவில் உச்சகால

                  தீபாராதனை  நடைபெறும்.    இவ்விழாவில்   நம்   சமுதாய   மக்கள்   அனைவரும் தங்கள் குடும்பத்துடன் 

                  கலந்து   கொண்டு   ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

                                             

Back

 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்