ஒடுப்பறை

                             இரணியல்    கீழத்தெரு   செட்டு   சமுதாய    ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்  கோவிலில்  இருந்து   1கி.மீ  

               தொலைவில்    இரணியல்    வள்ளியாற்றை    கடந்து    குருந்தன்கோடு     செல்லும்    சாலையில்   தெக்கன்               

               திருவிளை    என்னும்   ஊரில்   நமது  ஒடுப்பறை  அருள்மிகு   நாகரம்மன்  கோவில்  உள்ளது.     இரணியல்               

               கீழத்தெரு  செட்டு  சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவில்   நிர்வாகத்தால்   பல   நூற்றாண்டுகளாக               

               இக்கோவிலின்   பூஜை    காரியங்கள்,     கோவில்     திருப்பணிகள்,     ஆயில்ய    விழாக்கள்      போன்றவை

               சிறப்பாக   செய்யப்பட்டு   பாதுகாக்கப்பட்டு   வருகிறது.

                              இக்கோவிலின்    முகப்பில்    உள்ள   மிகப்பெரிய   ஆலமரம்   பல   நூற்றாண்டுகளை   கடந்து  தனி

               சிறப்புடன்   காட்சியளிக்கிறது.      இம்மரத்தில்    இருந்து    உதிரும்    இலை,    தழைகளை    ஆடு,    மாடுகள்

               உண்பதில்லை  என்பது   மிகவும் குறிப்பிடதக்கது.     இங்கு    கணபதி   கோவில்,   சிவன்   பார்வதி  கணபதி

               கோவில்,   நாகராஜா,  நாகயஷி,  சித்திரகூடம்  போன்ற  கோவில்கள்  தனிதனியாக  உள்ளது.      செட்டுகுல

               கன்னிகைகள்   தங்கம்மை,   தாயம்மைக்கும்   தனியாக   கோவில்   உள்ளது.

     

 


 

 

 

 

                               இங்கு     ஒவ்வொரு      ஞாயிறு     மற்றும்   ஒவ்வொரு    மாத    ஆயில்ய     தினத்தன்று    கோவில்

              நடைதிறந்து   அபிஷேகம்   மற்றும்   தீபாராதனைகள்    நடைபெற்று   வருகின்றது.    மேலும்    ஆலமரத்தில்

              குடியிருக்கும்   தங்க   நிறத்தால்   ஆன   ஒரு   சாண்   நீளமுள்ள  நாகருக்கு    பாலும்,   முட்டையும்   வைத்து

              வழிபட்டு     வருவது     குறிப்பிடதக்கது.      ஒவ்வொரு     தமிழ்     மாத    கடைசி    ஞாயிற்று   கிழமையன்று 

              சிறப்பு   அபிஷேகம்,   திருவிளக்கு  பூஜை,   சிறப்பு   தீபாராதனைகள்,   மற்றும்  அன்னதானம்    நடைபெற்று 

              வருகின்றது.

                               ஒவ்வொரு     வருடமும்     சித்திரை     மாதம்     ஆயில்ய     நட்சத்திரத்தன்றும்   மற்றும்  பங்குனி

              உத்திரத்தன்றும்    சிறப்பு   பூஜைகள்   மற்றும்   அன்னதானம்   நடைபெற்று   வருகின்றது.      இக்கோவிலில்

              மிக    சிறப்பாக   கொண்டாடப்படும்   சித்திரை   மாத   ஆயில்ய   கொழுக்கட்டை விழா   பல  ஆண்டுகளுக்கு  

              ஒரு    தடவைதான்   வரும்.     இக்கொழுக்கட்டை    விழா   பற்றி   தகவல்   அறிய   கீழே   உள்ள   Link-ஐ  click

              பண்ணவும்.

கொழுக்கட்டை விழா 

                     

                                 மேற்குறிப்பிட்ட     நாள்களை    தவிர     மற்ற    நாட்களில்    ஒடுப்பறை   அருள்மிகு   நாகரம்மன்

               கோவிலில்    சிறப்பு    பூஜைகள்   ( குழந்தைக்கு   சோறு   ஊட்டுதல்,  குழந்தைக்கு   பெயர்  சூட்டுதல், சிறப்பு

               வழிபாடு )   நடத்த    விரும்புவர்கள்   ஒரு   வாரத்திற்கு  முன்னர்   இரணியல்   கீழத்தெரு   செட்டு  சமுதாய 

               ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்   கோவில்  அலுவலகத்தில் /  நிர்வாகிகளிடம்   கடிதம்   மூலம்   தெரிவிக்குமாறு

               அன்புடன்   கேட்டு   கொள்ளப்படுகிறார்கள்.

 

                                  நமது    இரணியல்    கீழத்தெரு    செட்டு    சமுதாய    ஸ்ரீசிங்க    ரட்சக    விநாயகர்    தேவஸ்தான

               ஒடுப்பறை   நாகரம்மன்  கோவிலில்   ஒவ்வொரு  தமிழ்   மாத  2-வது   ஞாயிற்று  கிழமையும்,   இரணியல்

               கீழத்தெரு  செட்டு சமுதாய  அன்பர்களால்  சிறப்பு பூஜையும்,  அன்னதானமும்   நடத்தப்பட்டு  வருகின்றது.

 

                  ஒடுப்பறை 2-வது ஞாயிற்று கிழமை விழா 

 

ஒடுப்பறை தியான மண்டபம் - திறப்பு விழா

                                     ஒடுப்பறை நாகரம்மன் கோவில் அருகில் தியான மண்டபமும் அமைந்துள்ளது.  

 

 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்