கும்பாபிஷேகம் -2013 - சிறப்பு பகுதி

                            நமது   கீழத்தெரு  செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் கோவில் நூற்றாண்டு பழமையானது  என்பது

            நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். ஆனால் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து எத்தனை வருடங்கள்

            ஆகியுள்ளது  என்று  ஊர்  பெரியோர்கள் யாருக்கும்  சரியாக  தெரியவில்லை.   எனவே  கீழத்தெரு  செட்டு  சமுதாய

            இளைஞர்  அணி   மற்றும்  மகளிர்  அணியினரால்  கும்பாபிஷேகம்  நடத்துவதற்காக  கோவில்  நிர்வாகத்தினரிடம்

             மனு கொடுக்கப்பட்டது.  

                             பின்னர்  நடந்த  பல  காரிய  கமிட்டி  கூட்டங்களிலும்,  பொது  கூட்டத்திலும்,   இம்மனு  பற்றி  விவாதித்து 

             சமுதாய  உறுப்பினர்கள் அனைவரின் சம்மதத்தோடு  கோவிலில் கும்பாபி்ஷேகம் நடத்தலாம் என்று ஒருமனதாக

            தீர்மானிக்கப்பட்டது.   பின்னர்  நம்பூதிரிகளால்  கோவிலில் பல  முறை  பிரசன்னங்கள்  பார்க்கப்பட்டு   ஸ்ரீ. சி. ர. வி. 

            கோவிலில் கும்பாபிஷேகம்  நடத்தலாம்  என  முடிவு  எடுக்கப்பட்டது.

                              இதன்படி  பிப்ரவரி   3-ம் நாள்,  2012-ம்  ஆண்டு வெள்ளிகிழமை  ரோகிணி   நட்சத்திரத்தன்று   ஸ்ரீ. சி. ர. வி. 

             கோவிலில்  நடந்த  வருஷாவருஷம்  விழாவில்  ஸ்ரீசிங்க ரட்சக  விநாயகரிடம்  கும்பாபிஷேகம்  நடத்த  உத்தரவு

             வாங்க    நிர்வாகத்தால்   தீர்மானிக்கப்பட்டது.    இதன்படி   வருடந்தோறும்   நமது    கோவிலில்    வருஷாபிஷேக             கலச  பூஜை  மற்றும்  பல்வேறு  பூஜைகளை  செய்யும்   நம்பூதிரி   திரு. சங்கரசுப்பிரமணியலு   ( திருவனந்தபுரம் )             அவர்கள்   மூலமாக   ஸ்ரீசிங்க   ரட்சக    விநாயக   பெருமானிடம்    உத்தரவு   வாங்கும்   நிகழ்ச்சி      நடைபெற்றது. 

             இதன்  முடிவில்   ஸ்ரீ.சி.ர.வி. தேவஸ்தான மற்றும் சமுதாய  தலைவர் திரு. C.விஜயகுமார்,  சமுதாய  செயலாளர்        

             திரு.S.கோலப்பாபிள்ளை,  இணை  செயாலாளர் திரு.S.இராமகிருஷ்ணபிள்ளை,   பொருளாளர்   திரு.S.சிவகுமார்,

             தேவஸ்தான   இணை   செயலாளர்   திரு. P. அண்ணாமலைபிள்ளை   மற்றும்   சமுதாய   உறுப்பினர்கள்

             திரு.S.குற்றாலம்பிள்ளை,  திரு.S.மோகன் தாஸ்,  திரு.P.பொன்னப்ப தாஸ்,   திரு.K.மாதவன்பிள்ளை,   ஆகியோர்

            விநாயகர்  சந்நதியில் வைத்து  நம்பூதிரியிடம் "இன்னும் 2 வருடத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்துவோம்"  என்று

            சத்தியம் செய்து உத்திரவு வாங்கியுள்ளார்கள்.

                          னவே  கும்பாபிஷேகம்  வருகின்ற 2013- ம் ஆண்டு  தை மாதம்  ரோகிணி நட்சத்திரத்தில் நடத்தலாம் என

           நிர்வாகத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.  அதற்கு முன்னர் விநாயகர் மற்றும் சிவன் சந்நிதியில் உள்ள  கோபுரங்கள்

           சிதிலமடைந்து   உள்ளதால் அதனை  இடித்து  புதியதாக   கட்ட  கூட்டத்தில்   முடிவு  செய்யப்பட்டுள்ளது.    மேலும் 

           கோவிலின்  முன்பக்க  கல் மண்டபமும்  புதியதாக  மேல்தளம்  அமைத்து  ஓடுதளம்  அமைக்கப்பட   இருக்கின்றது.    

           கும்பாபிஷேகத்திற்கு  முன்னால் பல  ஹோமங்கள், கும்பாபிஷேகம் முடிந்த  பின்னர் 41  நாள்  பூஜைகள்,   மற்றும் 

           பல பரிகார பூஜைகள்   நடத்த  பட இருக்கின்றது. 

                          கோபுர  வேலைகள்,  கல்மண்டபம் தளம்  புதுப்பித்தல்  மற்றும்  ஓடுதளம் அமைத்தல்,  மராமத்து  பணிகள்,  

           வர்ண  பூச்சு வேலைகள், ஹோமங்கள்,  பரிகார பூஜைகள்,  41 நாள்   பூஜைகள், பூஜைக்குரிய  பொருட்கள்,  நம்பூதிரி

           செலவுகள், அன்னதான செலவுகள்,மற்றும் பல வேலைகள் நடைபெற இருப்பதால்,  நமது சமுதாய உறுப்பினர்கள்

           அனைவரும்   தங்களால்   இயன்ற   பொருளுதவியோ  அல்லது   பண   உதவியோ   செய்து    இந்த    கும்பாபிஷேக

           விழாவில்  தாங்கள்  அனைவரும்  தங்கள்  குடும்பத்துடன்  வருகை  தந்து  இவ்விழாவினை  மிக சிறப்பாக  நடத்தி

           தந்து விநாயகர்  பெருமான் அருள்  பெற்று வாழ்வில் மகிழ்ச்சி பெற்று  செல்லுமாறு நிர்வாகம் சார்பில்   அன்புடன்

           அழைக்கிறோம்.

                                           கும்பாபிஷேகம் பற்றிய மேலும் விவரங்களை அறிய கீழே Click செய்யவும்.

                                                                       ம்பாி் - 2013

இப்படிக்கு,

கும்பாபிஷேக விழாக்குழு,

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்,

கீழத்தெரு செட்டு சமுதாயம், இரணியல்.

           குறிப்பு : தாங்களால் இயன்ற  பண உதவியை "S.S.R.V.Devasthanam" என்ற   பெயரில் வரைவோலை / காசோலை 

                                அல்லது  M.O எடுத்து   "செயலாளர்,  ஸ்ரீசிங்க  ரட்சக   விநாயகர்    தேவஸ்தானம்,    கீழத்தெரு,     இரணியல்,     

                                           நெய்யூர்     அஞ்சல்   -  629802,   கன்னியாகுமரி    மாவட்டம் "     என்ற       முகவரிக்கு    அனுப்பி      வைக்குமாறு

                                 கேட்டு கொள்கிறோம்.

                                 மேலும்    "EKCS"    A/c No  :  0566053000000777   (  IFS  CODE : SIBL0000566 )   South   Indian   Bank, 

                                 Thuckalay   வங்கி கணக்கிலோ செலுத்தலாம்.

                                 SSRVDevasthanam A/c No: 30307159211 (IFSC CODE :                        ) State Bank Of India, Thingal Nagar

                                 வங்கி கணக்கிலும் செலுத்தலாம்..

 

                                 மேலும்    விவரங்கள்  அறிய    ஸ்ரீசிங்க     ரட்சக    விநாயகர்  தேவஸ்தான    தலைவர்   திரு. C. விஜயகுமார் 

                                           ( Mobile : 9443426489 ),    செயலாளர்  திரு. N.சிவசுப்பிரமணிய பிள்ளை ( Mobile: 9489817695 ),   பொருளாளர    

                                            திரு. S. சிவகுமார்,   (  Mobile : +91-9443657529 )  ஆகியோரை  தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

                                அல்லது  சமுதாய  மின்னஞ்சல் முகவரி ekcsssrvd@gmail.com  or ssrvderaniel@yahoo.com  என்ற

                                            முகவரிக்கு   மின்னஞ்சல்   அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம். 

 

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்