கொழுக்கட்டை விழா

 

               ஒடுப்பறை  அருள்மிகு  நாகரம்மன்  கோவிலின்  மிக  முக்கியமான விழா கொழுக்கட்டை திருவிழா 

          ஆகும்.    சித்திரை  மாதம்  கடைசி  ஞாயிறன்று   ஆயில்ய   நட்சத்திரம்   தொடங்கி   திங்கள்   கிழமை   காலை

          வரை,  சேர்ந்து வரும்  நாளில் இந்த  கொழுக்கட்டை  திருவிழா கொண்டாடப்படுகிறது.  கடைசியாக இவ்விழா 

          22  ஆண்டுகளுக்கு  பிறகு  2008 -ஆம்  ஆண்டு  மே  மாதம் 11  மற்றும் 12-ஆம்  தியதிகளில்   மிக  கோலாகலமாக

          கொண்டாடப்பட்டது.

             

                இவ்விழாவிற்கு   வெளியூரில்   இருக்கும்    நமது   சமுதாய   மக்களும்   மற்றும்   வெளிநாடுகளில்

            இருக்கும்   சமுதாய  மக்களும்  தங்கள்   குடும்பத்துடன்  வந்து  கலந்து  கொண்டு  விழாவை  சிறப்பித்தார்கள். 

            இக்கொழுக்கட்டை    விழாவிற்காக    ஒடுப்பறை    நாகரம்மன்    கோவிலை   சுற்றிலும்,   பந்தல்  அலங்காரம்,

            பூ   அலங்காரம்,  ஒலி   மற்றும்   ஒளி    அமைப்பு,   தங்கும்  வசதி,   தண்ணீர்   வசதி,   மற்றும்    கொழுக்கட்டை

            சுடுவதற்கான   இடம்  அமைத்தல்  மற்றும்  அவ்விடத்தில்  ஒளி  வசதிகள்  ஆகியவை   இரணியல்  கீழத்தெரு

            செட்டு சமுதாயத்தினரால் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

                              2008   மே  மாதம்  11-ம் தியதி   ஞாயிற்று  கிழமையன்று  காலையில்  இரணியல்  கீழத்தெரு  செட்டு

            சமுதாய   ஸ்ரீசிங்க   ரட்சக  விநாயகர்   கோவிலில்  வைத்து   வெள்ளியிலான  நாகரம்மன்  சிலைக்கு  சிறப்பு

            பூஜைகள்   செய்து,    பின்னர்   அம்மனை   யானை    மீது    பவனியாக    ஒடுப்பறை     அருள்மிகு    நாகரம்மன்

            கோவிலுக்கு   மேளதாளத்துடன்  எடுத்து   செல்லப்பட்டு  அங்கு   சிறப்பு   அபிஷேகம்  நடத்தப்பட்டது.  அதை

            தொடர்ந்து  அம்மன்  சன்னதியில்  பொங்கலிட்டு  வழிபட்டு  மதியம்  உச்சகால  தீபாராதனை  நடைபெற்றது.  

                              அன்று     இரவு    9:30    மணி   அளவில்   ஒடுப்பறை    நாகரம்மன்    கோவிலில்    வைத்து     விஷேச  

            சர்ப்ப    பூஜை     (SARPA BELI)     நடத்தப்பட்டது.      இரவு    11:00     மணிக்கு     நாகரம்மனுக்கு    "நீரும்   பாலும்"

            நைவேத்தியம்  கொடுக்கப்பட்டது.     பின்னர்  கோவிலை   சுற்றி   உள்ள   இடங்களில்   கொழுக்கட்டை  சுடும்

            நிகழ்ச்சி  தொடங்கியது.

                               12-ம்   தியதி   திங்கள்   கிழமையன்று     காலையில்   9:30  மணி   அளவில்   நாகரம்மனுக்கு   பெரிய

            படுக்கை,  மற்றும்  சுடப்பட்ட  கொழுக்கட்டை  நிவேத்தியம்  வைத்து   மகா   தீபாராதனை  மற்றும்   பூஜைகள்

            நடத்தப்பட்டது.     பின்னர்   காலை  10:30   மணி   அளவில்   கோவிலை  சுற்றியுள்ள    இடங்களில்   சுடப்பட்ட

            கொழுக்கட்டைகளுக்கு   தந்திரியால்  புண்ணிய   தீர்த்தம்   தெளிக்கப்பட்டது.   அதன்   பின்னர்   பக்தர்களுக்கு

            கொழுக்கட்டை    பிரசாதமாக     வழங்கப்பட்டது.        இவ்விழாவிற்காக     இரணியல்     கீழத்தெரு      செட்டு

            சமுதாயம் சார்பில் வெளியிடப்பட்ட   நிகழ்ச்சி நிரல் கீழே தரப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சி நிரல் - கொழுக்கட்டை விழா 

     

             கொழுக்கட்டை கணக்கிடும் முறை :

               ஒவ்வொரு  குடும்பத்திலும்  கடந்த  முறை  சுடப்பட்ட  கொழுக்கட்டை எண்ணிக்கையை  கணக்கில்

            கொள்ள  வேண்டும்.  அவ்வெண்ணிக்கையை  குடும்ப  பெரியவர்களிடம்  கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

            அவ்வாறு  தெரிந்து   கொள்ள  முடியாத  சூழ்நிலையில்  தற்போது   குடும்பத்தில்  இருக்கும் உறுப்பினர்களின்

            எண்ணிக்கையில் கொழுக்கட்டை சுட வேண்டும்.

                           ஒரு  குடும்ப தலைவர்,  தன்  குடும்பத்தில் சுடப்படும்  கொழுக்கட்டையில்  தலா  ஒரு  கொழுக்கட்டை

            வீதம்      தன்       சகோதரிகளுக்கும்,       தன்      மகள்களுக்கும்    கொடுக்க    வேண்டும்.      நண்பர்கள்   மற்றும்

            உறவினர்களுக்கும்   செய்து  கொடுக்கும்  கொழுக்கட்டைகள்  இந்த  எண்ணிக்கையில்  சேராது. 

  

கொழுக்கட்டை கணக்கிடும் முறை - முழு விவரம

    

       ஒரு கொழுக்கட்டைக்கு தேவையான பொருட்கள் :  

தேவையான பொருட்கள் அளவு
  பச்சரிசி                                   750 கிராம்      
  வெல்லம் (கோட்டயம்)    450 கிராம்      
  தேங்காய் (நடுத்தரம்)         1 முழுவதும்
  சுக்கு                                          5 கிராம்          
  ஏலக்காய்                                 5 கிராம்          
  மட்டி பழம்                                1 எண்ணம்   
  தலை வாழை இலை           1                        
  தென்னம் குருத்தோலை   11 + 11              
  கைதை நார்                              4+4+3               

                கொழுக்கட்டை   செய்வதற்கான   செய்முறைகள்  அறிய  இரணியல்   கீழத்தெரு  செட்டு  சமுதாய

             ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்   தேவஸ்தானம்   சார்பில்   வெளியிடப்பட்ட    செய்முறை    விளக்க    கையேடு

             கீழே தரப்பட்டுள்ளது.

       பொருட்கள் தயார் செய்யும் முறை 

       கொழுக்கட்டை தயார் செய்யும் முறை 

        கொழுக்கட்டை சுடும் முறை 

           

                                       இதற்கு முன்னால் கொழுக்கட்டை விழா நடந்த ஆண்டுகள் பின் வருமாறு :                      

வ.எண்  வருடம்  நாள் மற்றும் நேரம்
1 22-09-1116

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி 53 நாழிகை ஆயில்யம் காலை மணி 8:30 க்கு மேல்                                                        

2 18-09-1119

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் காலை மணி 11:30 க்கு மேல்                                                                                                                 

3 30-09-1126

நான்காவது ஞாயிற்றுக்கிழமை (கடைசி) ஆயில்யம் காலை மணி 10:00 க்கு மேல். இரவு 10.00 மணிக்கு மேல் அஷ்டமி           

4 26-09-1129

நான்காவது ஞாயிற்றுக்கிழமை (கடைசி) ஆயில்யம் காலை மணி 12:30 க்கு மேல். மாலை 5:00 மணிக்கு மேல் அஷ்டமி        

5 14-09-1133

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் காலை மணி  9:30 - க்கு  மேல்                                                                                                                 

6 11-09-1136

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் மாலை மணி 6:10 - க்கு மேல். மாலை 5:00 மணி வரை அஷ்டமி                             

7 23-09-1143

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் பகல் 1:30 மணிக்கு மேல்.  பகல் 11:00 க்கு மேல் அஷ்டமி                                     

05-05-1968

8 19-09-1146

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் பகல் 2:30 மணிக்கு மேல்.   மாலை மணி 4:00 க்கு மேல் அஷ்டமி                  

02-05-1971

9 03-09-1153

முதல் ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் இரவு மணி 1:00 - க்கு மேல்                                                                                                                                       

16-04-1978
10 28-09-1156

நான்காவது ஞாயிற்றுக்கிழமை                                                                   

10-05-1981

11 17-09-1160

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் பகல் 2:00 மணிக்கு மேல்.   இரவு மணி 9:00 க்கு மேல் அஷ்டமி                        

28-04-1985

12 29-09-1183

கடைசி ஞாயிற்று கிழமை

11-05-2008

ஆயில்ய திருவிழா கொண்டாடுவதன் நோக்கம் பற்றி முன்னோர்கள் சொன்ன

கருத்து என்னவென்றால்

                           ஆயில்ய  திருவிழா  கொண்டாடுவதன்  காரணத்தினால்  நாம்  ஒரே  இடத்தில்  ஒன்றாக  கூடுவதால்

          நமது    குடும்ப    உறவு    பலப்படுகிறது.      இதன்    வாயிலாக    பல    திருமணங்கள்    நடந்துள்ளது    கண்கூடு. 

          வெளியூரில்   இருக்கும்    நமது   உறவினர்களை  ஒன்றாக    பார்க்கும்    பாக்கியம்    கிடைப்பது   பெரும்பேறு.  

          நாகரம்மன்   கோவில்   மற்றும்   சுற்றுப்புறங்கள்   தூய்மையாவதும்,   கோவிலுக்கு  நல்ல  வசதியான  சாலை

          வசதி   ஏற்படுவதும்  இம்மாதிரி   விழாவின்  போதுதான்.   இவை  எல்லவற்றையும்  விட  நாகரம்மன்  அருள்

          நமது   குடும்பத்தார்  (சமூகத்தார்)  எல்லோருக்கும்   கிடைப்பது  மிகப்பெரிய   மகிழ்ச்சிக்குரிய  விஷயமாகும்.

                             இன்றைய      நிலையில்    நம்   முன்னோர்கள்   தோற்றுவித்த    இப்பெரும்விழா   நம்   காலங்களில்

          அழிந்து     விடாமல்    இருக்க    நாம்   முன்    நடந்த   விழாக்களைப்   பற்றி   சிந்திப்போம்.    இனிமேல்   வரும்

          விழாக்களையாவது   கொண்டாட   நடவடிக்கை    எடுத்து    நம்   சமூக   ஒற்றுமையும்,   நாகரம்மன்   அருளும்

          கிடைக்க  வழி செய்வோம்!. 

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்