முத்தாரம்மன் கோவில் கொடை - 2015

மூன்றாவது நாள் - கொடை விழா

                                நமது  இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் கோவிலில் அமைந்துள்ள

               முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழாவின்  மூன்றாவது நாளான  கொடை விழா மே மாதம் 13-ம் தேதி

               செவ்வாய் கிழமை  அன்று  காலை கலச பூஜை மற்றும் வில்லுபாட்டுடன் மிகச்சிறப்பாக  தொடங்கியது  

               அன்று காலை 7:30  மணி அளவில் யானையுடன் ஆற்றுக்கு ஊர்வலமாக   சென்று புது நீர் எடுத்து  வந்து 

               அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில் மகா தீபாராதனை

               நடந்தது.  அதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது. 

கலச பூஜை (முத்தாரம்மன் கோவில் )

 

புதுநீர் எடுக்க செல்லுதல்

 

அபிஷேக குடம்

                             அபிஷேக குடத்தில் பால், சந்தனம், பன்னீர், மஞ்சள், களபம் என   21 குடங்களில் அபிஷேக பொருட்களை

              நிரப்பி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

 

புதுநீர் & அபிஷேக குடம் தீபாராதனை

 

புதுநீர் எடுத்து யானை பவனி

 

அம்மனுக்கு பொங்கலிடுதல்

                               அம்மனுக்கு புதுநீர் அபிஷேகம் முடிந்ததும் மதியம் 11:45  மணி அளவில் சன்னதி   தெருவில் 

             அனைவரும்   தத்தம்  வீடுகளின்  முன்னால் பொங்காலை   போட்டனர்.   

 

செண்டை மேளம்

                               மாலை 6:00  மணி அளவில் செண்டை மேளம் கச்சேரி நடந்தது.   அதன் பின்னர் இரவு 8.30 மணி

            அளவில் தீபாராதனை நடந்தது.  

 

பூ அலங்காரம்

 

வாகன அலங்காரம்

 

அம்மன் வாகனத்தில் பவனி

                         பின்னர்  இரவு 9 :00 மணி அளவில்  சப்பற  வாகனத்தில்  அம்மன்  எழுந்தருளி  வாகன பவனி

          தொடங்கியது.  

 

  

                             வாகன    பவனியானது  காவடி செல்லும் பாதையில் சென்று  இரவு 12: 15 மணி அளவில் கோவிலை

          வந்து அடைந்தது.   அதனை தொடர்ந்து இரவு 1:00  மணிக்கு அம்மனுக்கு ஒடுக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

          பின்னர்  வாண  வேடிக்கை  நடைபெற்றது.  ஒடுக்கு  சாதம்  பிரசாதமாக  கொடுக்கப்பட்டது.    

Back

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்