முத்தாரம்மன் கோவில் கொடை - 2015

விழா தொடக்க நாள் - முதல் நாள்

                                    நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக   விநாயகர் கோவிலில் அமைந்துள்ள

               முத்தாரம்மன்  கோவிலில்  கொடைவிழா 2015, மே மாதம் 10-ம் தேதி ஞாயிற்று கிழமை  அன்று சிறப்பாக

               தொடங்கியது.   இவ்விழாவில் சமுதாய   மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து  கொண்டு விழாவினை 

               சிறப்பித்தார்கள்.     அன்று காலை பிள்ளையார் கோவிலில் கணபதிஹோமத்துடன் எல்லா கோவில்களிலும்

               சிறப்பு  அபிஷேகம்  நடத்தப்பட்டது.   பின்னர்  மாலையில்  திருவிளக்கு  பூஜையும்,  அதனை  தொடர்ந்து

               முத்தாரம்மனுக்கு  புஷ்பாபிஷேகம்  நடைபெற்றது.    பின்னர்   முத்தாரம்மனுக்கு  அலங்கார  தீபாராதனை 

                நடந்தது.   முதல்  நாள்  கொடை விழா இனிதே முடிவு பெற்றது.  முதல் நாள் photos கீழே

கணபதி ஹோமம் - பிள்ளையார் கோவில்

                முத்தாரம்மன்  கோவில்  கொடை விழா 10.05.2015  ஞாயிற்றுகிழமை அன்று காலை விநாயகர் கோவிலில்

                 கணபதிஹோமத்துடன் இனிதே தொடங்கியது.

 

கோவில் அலங்காரம்

 

திருவிளக்கு பூஜை

அன்று மாலை 6:00 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

 

புஷ்பாபிஷேகம்

                  பின்னர் இரவு 8:00 மணி அளவில் முத்தாரம்மனுக்கும் பைரவருக்கும் மற்றும் எல்லா கோவில்களிலும் 11

                  வகையான ( அரளி, துளசி,  தாமரை,  ரோஜா,  முல்லை,  தெத்தி பூ,  செவ்வந்தி,  வாடாமல்லி,   வில்வ இலை,

                  கொழுந்து)   பூக்களை கொண்டு புஷ்பாபிஷேகம் சிறப்பாக செய்யப்பட்டது. 

 

அதனை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. பின்னர் பக்தர்களுக்கு நைவேத்திய

 பிரசாதம் வழங்கப்பட்டது. அத்துடன் முதல் நாள் விழா இனிதே முடிந்தது.

Back

 

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்