காவடி கெட்டு - 23rd Feb 2015

                                        நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் 2015 ,பிப்ரவரி மாதம்

                        23-ம் நாள் காவடிகெட்டு விழா மிக விமரிசையாக கொண்டாடபட்டது.  அதன் விவரம் வருமாறு.

காவடிகெட்டு - முதல் நாள் பூஜை - 20.02.2015

20.02.2015 அன்று காவடி பூஜையில் வைக்கப்பட்டது. 3 நாட்கள் காலை மற்றும் மாலை இரு வேளையும் பூஜை நடைபெற்றது.

 

காவடிகெட்டு - மூன்றாம் நாள் பூஜை - 22.02.2015

 

காவடி மேளம் - 22.02.2015

 

கோவில் அலங்காரம்

 

கறிக்காய் வெட்டுதல் - 22.02.2015

22.02.2015 அன்று இரவு பூசணிக்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

காவடிகெட்டு -  காவடி ஆற்றுக்கு செல்லுதல் - 23.02.2015

காலை 3.30 மணி அளவில் காவடி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு காவடிக்கு, பால், எண்ணெய், தயிர், தேன்,

இளநீர்,கரும்பு, பன்னீர், மஞ்சள், களபம், சந்தனம், திருநீர் முதலிய 11 அபிஷேக பொருளால் காவடி குளிப்பாட்டப்பட்டு

காவடி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது

 

காவடி கலசத்தில் எண்ணெய் அடைத்தல் - 23.02.2015

காலை 5.15 மணி அளவில் காவடி முருகனால் காவடி கலசத்தில் எண்ணெய் அடைக்கப்பட்ட்து.

 

காவடி அலங்காரம் - 23.02.2015

கலசத்தில் எண்ணெய் அடைத்தபிறகு காவடி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.


காவடி அலங்கார தீபாராதனை - 23.02.2015

காவடி அலங்காரம் முடிந்த பிறகு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

 

காவடி பவனி புறப்படுதல் - 23.02.2015

அலங்கார தீபாராதனை முடிந்த பிறகு காவடி பவனி காலை 7:20 மணி அளவில் புறப்பட்டது.

 

காவடி பவனி - 23.02.2015

 

உச்சிகால தீபாராதனை - 23.02.2015

காவடி பவனி முடிந்து மதியம் 12 மணி அளவில் காவடி கோவிலில் இறக்கபட்டது.  பின்னர் காவடிக்கு

அன்னம் படைத்து பூஜை நடத்தப்பட்டது.

 

அன்னதானம் (கஞ்சிதர்மம்) - 23.02.2015

உச்சிகால பூஜை முடிந்து கஞ்சி தர்மம் நடைபெற்றது.

 

காவடிகெட்டு - மாலை திருச்செந்தூர் புறப்படுதல்

மாலை 5:30 மணி அளவில் காவடி கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது.

 

திருச்செந்தூர் காவடி பூஜை - சத்திரம் - 27.02.2015

காவடி 25.02.2015 இரவு 12 மணி அளவில் திருச்செந்தூர் சத்திரம் சென்றடைந்தது. பின்னர் 27.02.2015 அன்று காலை காவடி

பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அபிஷேகத்திற்காக எடுத்து

செல்லப்பட்டது.

இடும்பன் பூஜை - திருச்செந்தூர் - 27.02.2015

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் முடிந்த் பிறகு சத்திரத்தில் இடும்பன் பூஜை நடைபெற்றது.

அன்னதானம் - திருச்செந்தூர் - 27.02.2015

இடும்பன் பூஜை முடிந்து சத்திரத்தில் அன்னதானம் நடைபெற்றது.


சுபம்

Back

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்