காவடி கெட்டு விழா - 2011

       

                                     1186-ம்  வருட    காவடி    கெட்டு    விழாவிற்காக    காவடி   முருகனை    தேர்ந்தெடுக்கும்    குலுக்கல்

            10-12-2010   வெள்ளிகிழமை  அன்று   நமது   இரணியல்   கீழத்தெரு   செட்டு   சமுதாய   ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்

            தேவஸ்தானத்தில்   வைத்து   நடைபெற்றது.   இதில்   2  காவடி   முருகன்கள்   அவர்களின்  விருப்பத்தின்  பேரில்

            தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   காவடி  முருகன்கள்  பெயர்  விவரம்  பின்வருமாறு

                                                                                            

                                                                                                                         

                                       திரு.V.சுப்பிரமணியம்                                                                 திரு.V.S.விஸ்வகுமார்

                                                இரணியல்                                                                                   திருநெல்வேலி

                             காவடி     கெட்டு    விழாவானது     பிப்ரவரி  9,  2011     புதன்கிழமை    அன்று     மிகவும் கோலாகலமாக

             நடைபெற்றது.      இரணியல்     கீழத்தெரு    செட்டு    சமுதாய     ஸ்ரீசிங்க     ரட்சக   விநாயகர்     தேவஸ்தானம்

            மற்றும்    காவடிகெட்டு   அன்னதான    குழு   சார்பாக   வெளியிடப்பட்டுள்ள   காவடிகெட்டு  அழைப்பிதழ்   கீழே

            இணைக்கப்பட்டுள்ளது.

காவடிகெட்டு - 2011 அழைப்பிதழ் 

                                                      காவடிகெட்டு விழா அழைப்பிதழ் - அன்னதானகுழு

 காவடிகெட்டு - 2011 நிகழ்ச்சி நிரல் 

    காவடிகெட்டு - முதல் நாள் பூஜை    

காவடிகெட்டு - 2 மற்றும் 3-ம் நாள் பூஜை 

 

காவடி கெட்டு கொடி அலங்காரம்

காவடி மேளம்

                   காவடிகெட்டு முன் தினம் இரவு 8:00 மணி அளவில் திரு.கெளதமன் குழுவினரின் நையாண்டி மேளம்

         நடைபெற்றது.

 கறிக்காய் வெட்டும் நிகழ்ச்சி

                             காவடி கெட்டு விழாவுக்கு முன்தினம் இரவு கறிக்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.  மறுநாள்

            கஞ்சி தர்மத்திற்க்கான பூசணிகாய், வாழைக்காய்,  பலா   போன்றவற்றை கோவில் முகப்பில் குவித்து ஊர்

            மக்கள் ஒன்றுகூடி வெட்டுவார்கள்.

காவடி நீராடுதல்

                                  காவடி   கெட்டு   தினத்தன்று  (பிப்ரவரி 9, புதன் கிழமை)   இரண்டு    காவடிகளையும்    அதிகாலை 

                  2:30   மணி    அளவில்    ஆற்றுக்கு   காவடி முருகன்கள்   எடுத்து   சென்று   அதனை   நீராட்டி   கோவிலுக்கு

                  கொண்டு வந்தனர்.

எண்ணெய் அடைத்தல்

                               காவடி நீராடி கொண்டு வந்த பின்  இரண்டு காவடியிலும் உள்ள 4 கலசங்களில் காவடி முருகனால்

              அதிகாலை 4:00 மணி அளவில் எண்ணெய் அடைக்கப்பட்டது.

காவடி அலங்காரம்

                                   கலசத்தில்   எண்ணெய்   அடைத்த   பிறகு   காலை 5  மணி   அளவில்   காவடிக்கு   பல   விதமான 

               பூக்கள்,  எலுமிச்சை  பழ  மாலை,  ஆப்பிள்   மாலை   மற்றும்   வெள்ளி   குடை   ஆகியவற்றால்  அலங்காரம்  

               செய்யப்பட்டது.

 

காவடி அலங்கார தீபாராதனை

காவடி அலங்காரம் முடிந்து காலை 7:20 மணி அளவில் காவடிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. 

காவடி பவனி

                                     காவடி     தீபாராதனை    முடிந்த    பின்னர்    பண்டாரத்தால்   காவடி   தூக்கி காவடி    முருகனுக்கு

                கொடுக்கப்பட்டது.    கோவிலை    ஒரு   முறை    சுற்றி    வந்து    காலை 7:30 மணி   அளவில்  காவடி    பவனி

                 புறப்பட்டது.

 

காவடி &  அன்னதான தீபாராதனை (மதியம்)

                                        காவடி    பவனி   முடிந்து    காலை 11:45   மணி   அளவில்   காவடி    கோவிலில்   இறக்கப்பட்டது.

                  பின்னர் காவடி மற்றும் கஞ்சி   தர்மத்துக்கான தீபாராதனை ஸ்ரீ.சி.ர.வி.கோவில்  அர்ச்சகர் திரு.கண்ணன்

                  அவர்களால்    தேவாரம்   பாடி   நடத்தப்பட்டது.   தீபாராதனை    முடிந்த   பின் ஊர் மக்கள் அனைவருக்கும்

                  அன்னதான குழு சார்பில் கஞ்சி மற்றும் பூசணிக்காய் கூட்டு வழங்கப்பட்டது.

காவடி தீபாராதனை (மாலை) & காவடி திருச்செந்தூர் புறப்படுதல்

                                        பின்னர்  மாலை  5:30  மணி   அளவில் காவடிக்கு  தீபாராதனை  நடத்தப்பட்டு  இரு காவடிகளும்

                  இரு   காவடிமுருகன்    மற்றும்      இரணியல்     கீழத்தெரு    பாதயாத்திரை    குழுவால்     திருச்செந்தூருக்கு

                  பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

காவடிகெட்டு பாத யாத்திரை குழு - இரணியல் கீழத்தெரு

இரு காவடிகளும்  பாத யாத்திரையாக பாத யாத்திரை குழுவால் கொண்டு செல்லப்பட்டது.

திருச்செந்தூர் பயணம்

                                         பாதயாத்திரையாக   கொண்டு   செல்லப்பட்ட   காவடியானது   பிப்ரவரி  11-ம்  தேதி  இரவு    10:30  

                  மணி    அளவில்    திருச்செந்தூர்    அருகில்    உள்ள    கல்லாறு    என்னும்    இடத்தை     அடைந்தது.   பின்னர்

                  அங்கு     காவடிக்கு    பஞ்சாமிர்தம்    படைத்து    தீபாராதனை   நடத்தப்பட்டது.  

                   பின்னர்    அங்கிருந்து    இரு காவடிகளும்    காவடி    முருகனால்    எடுத்து   செல்லப்பட்டு   இரவு 1:00   மணி

                  அளவில்  திருச்செந்தூரில்  உள்ள  நமது  இரணியல்  கீழத்தெரு  செட்டு  சமுதாய  கட்டிடத்தை  அடைந்தது.

 

திருச்செந்தூர் -  எண்ணெய் அபிஷேகம்

                                             பிப்ரவரி   13  2011,    ஞாயிற்றுகிழமை    அன்று   காலை   8:00    மணி   அளவில் திருச்செந்தூர்

                  சமுதாய      கட்டிடத்தில்     வைத்து     காவடிகளுக்கு     தீபாராதனை     நடத்தப்பட்டு     பின்னர்      காவடிகள்

                  காவடி    முருகனால்    திருச்செந்தூர்    செந்திலாண்டவர்    சன்னதிக்கு   எடுத்து    செல்லப்பட்டு,  காவடியில்

                  உள்ள     கலசத்தில்    கொண்டு     செல்லப்பட்ட     எண்ணெய்யினால்    முருக    பெருமானுக்கு    அபிஷேகம்

                  செய்யப்பட்டது.

இடும்பன் பூஜை

                                               காவடி    அபிஷேகம்    முடிந்து    காவடிகள்    சமுதாய   கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டு, 

                  சத்திரத்தில்     வைத்து      இடும்பன்     பூஜை       நடத்தப்பட்டது.       அதை      தொடர்ந்து    3     பண்டாரங்கள்

                  திருவாசகம்   படித்து   அனைவருக்கும்   ஆசி   வழங்கினர்.   அதன்   பின்னர்   அனைவருக்கும் அன்னதானம்

                  வழங்கப்பட்டது.

 

Back

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்