நிகழ்ச்சி நிரல் - காவடிகெட்டு - 2020

              

                                                     காவடிகெட்டு   விழா  பூஜை   நாள்   மற்றும்   நேரங்கள்   பின்வருமாறு

25-02-2020 காலை 7:00 மணி காவடி பூஜையில் வைக்கப்படும். மூன்று நாட்கள் தினமும் காலையும், மாலையும் பூஜை நடைபெறும்.
27-02-2020 மாலை 6:30 மணி நாதஸ்வர ராஜமேளம் நடைபெறும். 
27-02-220 இரவு 8:30 மணி காவடி பூஜை நடைபெறும். 
27-02-2020 இரவு 10:00 மணி பூசணிக்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். 
27-02-2020 இரவு 11:00 மணி நாதஸ்வர மேளம் நடைபெறும். 
28-02-2020 காலை 3:30 மணி காவடியை ஆற்றுக்கு கொண்டு சென்று நீராட்டும் நிகழ்ச்சி.
28-02-2020 காலை 3:45 மணி  காவடிக்கு எண்ணெய் எடுக்க செல்லுதல். 
28-02-2020 காலை 5:20 மணி  காவடி கலசத்தில் எண்ணெய் அடைத்தல். 
28-02-2020 காலை 5:45 மணி  காவடி அலங்காரம் நடைபெறும்.
28-02-2020 காலை 7:00 மணி  காவடி அலங்கார தீபாராதனை நடைபெறும். 
28-02-2020 காலை 7:30 மணி  காவடி பவனி புறப்படுதல். 
28-02-2020 மதியம் 12:00 மணி காவடி பவனி முடிந்து காவடி கோவிலில் இறக்கப்படும். 
28-02-2020 மதியம் 12:30 மணி  அன்னம் படைத்து காவடிக்கு தீபாராதனை நடத்தப்படும்.
28-02-2020 மதியம் 12:45 மணி  அன்னதானம் (கஞ்சி தர்மம்) நடைபெறும். 
28-02-2020 மாலை 5:30 மணி காவடி பூஜை மற்றும் காவடி பவனி 
28-02-2020 மாலை 6:00 மணி  திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக காவடி புறப்படும். 
29-02-2020 காலை 10:00 மணி காவடி சமூகரெங்கபுரம் சென்றடையும். அங்கே மதியம் 12:30 மணி அளவில் காவடி பூஜை முடிந்து கஞ்சிதர்மம் நடைபெறும்
01-03-2020 இரவு 11:30 மணி  கல்லாற்றில் வைத்து காவடிக்கு பஞ்சாமிர்தம் வைத்து பூஜை செய்து காவடி முருகனால் திருச்செந்தூருக்கு எடுத்து செல்லப்படும்.
03-03-2020 காலை 7:00 மணி காவடிக்கு பூ அலங்காரம் செய்து இ.கீ.செ.ச. சத்திரத்தில் இருந்து கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு காவடியில் உள்ள எண்ணெயை கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
03-03-2020 மதியம் 11:30 மணி இ.கீ.செ.ச. சத்திரத்தில் வைத்து இடும்பன் பூஜை நடைபெறும்
03-03-2020 மதியம் 12:00 மணி இ.கீ.செ.ச சத்திரத்தில் வைத்து அன்னதானம் நடைபெறும்.

                                      மேற்கூறிய   இவ்விழாக்களுக்கு   நமது   சமுதாய  மக்கள்  அனைவரும்  தங்கள்  குடும்பத்துடன்  

                தவறாது    வருகை  தந்து   விழாவினை    சிறப்பித்து   முருகனருள்  பெற்று   செல்லுமாறு    அன்புடன்   

                அழைக்கிறோம்.

                                      இக்காவடிகெட்டு  விழாவிற்கு சமுதாய  உறுப்பினர்கள்  அனைவரும்  காவடி வகைக்கு  Rs.400/-  

                 மற்றும் மேற்கூறிய  2  அன்னதானங்களுக்கும் தங்களால் இயன்ற   பொருளுதவியும்,   பண  உதவியும்   தந்து 

                 விழாவினை   சிறப்பித்து   செந்திலாண்டவர்  அருள்  பெற்றுய்யுமாறு  அன்புடன்   வேண்டுகிறோம்.

          

                 குறிப்பு :    காவடிகெட்டு   மற்றும்  அன்னதானத்திற்கு   பண   உதவி   செய்ய   விரும்பும் பக்தர்கள்  

                                           M.O   அல்லது  "EKCS"   என்ற   பெயரில்    வரைவோலை / காசோலை    எடுத்து

செயலாளர்,  

ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்  தேவஸ்தானம்,   

கீழத்தெரு,     இரணியல்,     

நெய்யூர்    அஞ்சல்  - 629802    

                                          என்ற     முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு   அன்புடன் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

            குறிப்பு 2:   மேற்கூறிய   நிகழ்ச்சி  நிரலில் நேரம் மாறுதலுக்குட்பட்டது.

இவண்,

விழாக்குழுவினர்,

இ.கீ.செ.ச, கீழத்தெரு, இரணியல்.

Email : ssrvderaniel@yahoo.com

 

Back

[footer.htm]