திருக்கார்த்திகை தீபத்திருவிழா - 2013

                      நமது ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் கோவிலில் 2013   நவம்பர் 17-ம்  தியதி ஞாயிற்றுகிழமை   அன்று

            திருக்கார்த்திகை  தீபத்திருவிழா  மிக  சிறப்பாக   கொண்டாடப்பட்டது.   அன்று இரவு சுமார் 8:00 மணி அளவில்

            நமது  இரணியல்  கீழத்தெரு  செட்டு சமுதாய  ஒடுப்பறை  அருள்மிகு  நாகரம்மன்  கோவிலில் நாகரம்மனுக்கு

            பால்  மற்றும்  தினை மாவு,  வெல்லம்,  தேன்  கலந்து  அம்மனுக்கு  படைத்து,  கோவிலை  சுற்றிலும்  விளக்கு

            ஏற்றி  தீபாராதனை  நடத்தப்பட்டது.

காலை 06:30  மணி : கோவில் நடை திறப்பு
 காலை 7:30  மணி : அபிஷேகம்
 காலை 8:30  மணி : தீபாராதனை
 காலை 8:45  மணி : கோவில் நடை அடைப்பு
 காலை 10:00 மணி : ஒடுப்பறை நாகரம்மன் கோவிலில் கார்த்திகை மாத தினசரி  தீபாராதனை
மாலை 5:30  மணி : கோவில் நடை திறப்பு
 இரவு 7:30மணி : சாயரட்சை தீபாராதனை
 இரவு 8:00  மணி : ஒடுப்பறை நாகரம்மன் கோவிலில் திருக்கார்த்திகை சிறப்பு தீபாராதனை
இரவு 09:00  மணி : ஸ்ரீ.சி.ர.வி.கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதல்
 இரவு 9:30  மணி : சிறப்பு தீபாராதனை
இரவு 10:00  மணி : கோவில் நடை அடைப்பு

 

திருகார்த்திகை  சிறப்பு அழைப்பிதழ் 

 

                              அதன் பின்னர் சுமார்  9:30  மணி  அளவில்  இரணியல்  கீழத்தெரு  செட்டு  சமுதாய  ஸ்ரீசிங்க   ரட்சக

            விநாயகர் கோவிலை சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்றி தீபாராதனை நடத்தப்பட்டு பூஜை செய்யப்பட்ட  பெரிய 

            அகல் விளக்கு தீபம் கோவில் குளத்தில் விடப்பட்டது.    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

 

  

திருக்கார்த்திகை தீபஒளிக்குப் பின்னணி என்ன?.... 

                               ஒவ்வொரு  ஆண்டும்  கார்த்திகை மாதம் பௌவுர்ணமி  திதியும்,  கார்த்திகை  நட்சத்திரமும் கூடிய

            நந்நாளில்   தமிழர்கள்   வாழும்   பகுதிகள்   அனைத்திலும்,   முக்கியமாக    திருவண்ணாமலையிலும்   எல்லா

            கோவில்களிலும்,   வீடுகளிலும்    இடம்   பெறும்    சிறப்பான   தீபத்  திருவிழா   திருக்கார்த்திகைத்   திருவிழா.

            இம்மாதத்தின்  பெயரும்   நட்சத்திரப்   பெயராக  கார்த்திகை  என்றே   வருவதை   வைத்து,   இந்த  திருநாளின்

            முக்கியத்துவத்தினை  உணரலாம்.  வரிசையாக  திருவிளக்கு  ஏற்றி,  அந்த  தீபஓளியில்  நமது   சிந்தனையை

            செலுத்தி,     நம்    வாழ்க்கையின்    இருள்   அகற்றி   உற்சாகம்   தரும்   ஒளி    தருகின்ற   அந்த  அற்புதத்தினை

            அன்றைய    தினமĮ  மெய்சிலிர்க்க  உணர்ந்தேத்தும்  பாங்கு  தான்  எ&85;்னே!&nb                     

அப்பர் சுவாமிகள&021; “ஆடிப்பாடி அண்ணாமலைத் தொழ ஓடிப்போம் நமது தீவினைகளேஎன்கிறார்.

                                இதன்   பின்னணியாக,  படைத்தல்   செய்யும்   பிரம்மனும்,   காத்தல்   செய்யும்   விஷ்ணுவும்   யார்

             பெரியவர்  என்று வாதாடிப் பல வருடங்கள்  போரிட்டதாகவும்,  கர்வத்தை அடக்க  எண்ணிய சிவபெருமான்

             இவர்கள்      முன்       ஜோதிப்      பிழம்பாக      தோன்றி்,     அடியையும்     முடியையும்     தேடும்     படி    அசரீரி

             கூறியதாகவும்,      ஜோதியின்   முடியைக்   காண  அன்னப்பறவை   வடிவம்  கொண்டு  சதுர  முகப் பிரம்மன்

             விண்ணுலகம்    சுற்றியதாகவும்,    அடியைக்    காண   திருமால்  வரா   அவதாரம்  எடுத்து   பாதாளலோகம்

             சென்று அடிமலரடியைத் தேடியதாகவும், அவ்வாறு  அடிமுடி காண  இயலாத பரம்பொருளாக  விளங்கினார்

             எம்பெருமான்    என்றும்,    அதனால்    இருவரும்    சிவபெருமானே     முழு    முதற்   கடவுள்    என்று    ஏற்றுக்

             கொண்டதாகவும்,   அவர்கள்   இருவரும்     தாம்    கண்ட    ஜோதியை   எல்லோரும்   காணும்படி   காட்டியருள

             வேண்டும்   எனக்   கேட்க   அவர்   திருக்கார்த்திகை   நட்சத்திரத்தன்று   ஜோதிப்பிழம்பாகக்   காட்சியருளினார்

             எனவும்,   அத்தத்துவத்தை  விளக்குவதே  திருக்கார்த்திகை   தீபத்திருவிழாவின் புராணக்கதையாகும்.  யோக

             நெறியால்   அன்றி    காணமுடியாத   தெய்வ  ஒளியை   திருவண்ணாமலையில்  ஏறத்தாழ   மூவாயிரம்  அடி  

             உயரத்தில்   உள்ள   மலைமேல்   திருக்கார்த்திகை   நட்சத்திரத்தன்று    காணலாம்.

காண மலையிலே கலியுக தெயவம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி!

திருவண்ணாமலையிலே அவரத்தம் ஐயனின் அண்ணாமலையார் தீப ஜோதி!!

                              அன்றைய    தினம்    பக்த   கோடிகள்  ஜோதியை   கண்டு   அருள்    வேண்டி   முழுமனதாய்   வழிபட்டு

             நின்றால்,    பஞ்ச   மூர்த்திகளின்   அருட்டாட்சத்தால்,    பஞ்சேந்திரியங்களை   அடக்கும்  மாபெரும்  ஆற்றல்

             பெற்று,     மெய்ஞான      சிந்தையுடையவர்களாக     விளங்குவர்    என்பது    உட்பொருள்.     இந்த    ஜோதியின்

             காரணமாக    தான்     மற்ற    கோவில்கள்    அனைத்திலும்   சொக்கப்பனை    கொளுத்தும்    பழக்கம் ஏற்பட்டு,

             காலம்    காலமாய்    தொய்வின்றி    நடந்தேறி    வருகிறது.      வைஷ்ணவ    ஆலயங்களிலும்    விளக்கொளிப்

             பெருமாள்   என்று    ஒரு    பெருமானை    கொண்டாடுகின்றனர்.    அகல்,   எண்ணெய்,   திரி,  சுடரொளி    ஆகிய

             நான்கும்   அறம்,  பொருள்,  இன்பம், வீடு என்ற  தத்துவங்களை  உணர்த்துவது போலாகும்.   பலி மகாராஜன்

             தனது       உடம்பிலே    தோன்றிய    வெப்பத்தை    கார்த்திகை     விரமிருந்து     தீர்த்துக்     கொண்டார்  என்ற

             புராணமும் உண்டு.

கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்

கீட பதங்கா மதகாகாஸ்ச வ்ருதா ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா

த்ருஷ்ட்வா ப்ரதீபம் நச ஜந்ம பாகிந

பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.

Back      


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்