ஒடுப்பறை விழா - சித்திரை ஆயில்ய விழா 2011

 

                                    நமது   இரணியல்  கீழத்தெரு  செட்டு  சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  தேவஸ்தான  ஒடுப்பறை

                நாகரம்மன்   கோவிலில்  ஒவ்வொரு   சித்திரை   மாத   ஆயில்ய  நட்சத்திர  நாள் அன்று  இரணியல்  கீழத்தெரு

                செட்டு  சமுதாய  அன்பர்களால்   சிறப்பு  பூஜையும்,  அன்னதானமும்   நடத்தப்பட்டு  வருகிறது.   இந்த  வருடம்

               சித்திரை   மாதம்   ஆயில்ய   நட்சத்திரம்   10-05-2011   செவ்வாய்   கிழமை   அன்று   மிக சிறப்பாக நடைபெற்றது.

               அன்று  நமது ஒடுப்பறை  நாகரம்மன் கோவிலில்  கலசபூஜை, திருவிளக்கு பூஜை, தேவிபூஜை ஆகிய பூஜைகள்

               மிக   சிறப்பாக   நடைபெற்றது.    அப்பூஜைகளில்    நமது    சமுதாய     உறுப்பினர்கள்    தங்கள்    குடும்பத்துடன்

               மகிழ்ச்சியோடும்,    பக்தியோடும்    கலந்துக்    கொண்டு     நாகரம்மனின்    அருள்    பெற்று   சென்றனர்.    

 

 கலச பூஜை  

                                  சித்திரை   ஆயிலய   தினத்தன்று   காலை   10.00    மணி    அளவில்   நம்பூதிரிகளைக்   கொண்டு  கலச

                பூஜை    மிக    சிறப்பாக   செய்யப்பட்டது.     பின்னர்    அக்கலச    நீரைக்    கொண்டு    கணபதி,    சிவன்   பார்வதி,

                நாகரம்மன் , நாகராஜா   கோவில்களில்   தனித்தனியாக   சிறப்பாக   செய்யப்பட்டது.

                               

பொங்கல் வழிபாடு & திருவிளக்கு பூஜை

                                 கலசபூஜை  மற்றும்  சிறப்பு  அபிஷேகங்களை  தொடர்ந்து,  பொங்கலிடும்  நிகழ்ச்சி  நடைபெற்றது.  

                  இதில்    இரணியல்    கீழத்தெரு     செட்டு    சமுதாய    மகளிர்    அணியினர்    பொங்கலிட்டு       அம்மனுக்கு   

                  படைத்தனர்.  அதனை தொடர்ந்து மகளிர் அணியினரால் திருவிளக்கு பூஜை மிக  சிறப்பாக  நடைபெற்றது.

 

                    

தேவி பூஜை

                                  திருவிளக்கு    பூஜை    முடிந்த    பின்னர்,    நாகரம்மன்,    நாகராஜ    கோவில்    முன்பு     தேவிபூஜை 

                நடைபெற்றது.   பின்னர்   ஆயில்ய   சிறப்பு   பூஜையான "நீரும் பாலும்"  பூஜை நாகரம்மனுக்கு நடத்தப்பட்டது. 

               

                                 இந்நிகழ்ச்சி    முடிந்தவுடன்   நாகரம்மனுக்கு   மிக   சிறப்பாக    சிறப்பு   தீபாராதனை   நடைபெற்றது.   

                அதனை  தொடர்ந்து  அன்னதானம் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாயத்தால் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.

 

சித்திரை மாத ஆயில்ய விழா -  2011 அழைப்பிதழ்

                       2011-ம்  ஆண்டு   சித்திரை  மாதம்  ஆயில்ய   விழாற்க்கான  அழைப்பிதழ்   கீழே   இணைக்கப்பட்டுள்ளது. 

 

                                      

                              இவ்விழாவில்    நமது   சமுதாய    உறுப்பினர்கள்    அனைவரும்    கலந்து      நாகரம்மன்     கோவிலில் 

                 பொங்கலிட்டு  அம்மனை  வழிபட்டு  அனைவரும் அருள்  பெற்று   சென்றனர்.   இனி  ஒவ்வொரு  தமிழ்    மாத   

                 இரண்டாவது   ஞாயிற்று  கிழமையும்  இரணியல்  கீழத்தெரு  செட்டு  சமுதாயத்தால்  நடத்த  பட  இருக்கிறது.   

                 இந்த  விழாவை  நடத்த  விரும்பும்   இரணியல்   கீழத்தெரு  செட்டு  சமுதாய  அன்பர்கள்  நமது    ஸ்ரீ. சி. ர. வி.  

                 தேவஸ்தான   தலைவர்   திரு .C.விஜயகுமார்   ( Mobile : 9443426489 )   அல்லது   ஸ்ரீ. சி. ர. வி.    தேவஸ்தான 

                செயலாளர் திரு. N. சிவசுப்பிரமணியபிள்ளை ( Mobile : 9489817695 )  அவர்களை    தொடர்பு    கொள்ளுமாறு     

                அன்புடன்     கேட்டு   கொள்கிறோம்

Back

 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்